தவெக சார்பில் ஆர்ப்பாட்டம் ஏராளமானோர் பங்கேற்பு..
Rasipuram King 24x7 |25 Dec 2024 4:50 PM GMT
தவெக சார்பில் ஆர்ப்பாட்டம் ஏராளமானோர் பங்கேற்பு..
தமிழக வெற்றி கழகம் சார்பில், வெண்ணந்தூர் பேரூராட்சி பகுதியில் பேருந்து நிலையம் அமைக்க செயல் அலுவலரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் பேரூராட்சி பகுதியானது விசைத்தறி தொழிலில் பிரசித்தி பெற்று விளங்கி வருகிறது. தினந்தோறும் வெண்ணந்தூர் பேரூராட்சிக்கு வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வியாபாரிகள், பொதுமக்கள் பலரும் வந்து செல்லும் நிலையில், இங்கு பேருந்துகள் நின்று செல்ல ஏதுவாக பேருந்து நிலையம் இல்லை. இந்நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் நிறுவனத் தலைவர் தளபதி விஜய் அவர்களின் நல்லாசியுடன் பொதுச் செயலாளர் முன்னாள் எம்எல்ஏ புஸ்ஸி என்.ஆனந்த் அவர்களின் ஆலோசனைப்படி நாமக்கல் கிழக்கு மாவட்டம் சார்பில் மாவட்ட தலைவர் ராசை ஜெ.ஜெ..செந்தில் நாதன், அவர்கள் தலைமையில், வெண்ணந்தூர் காமராஜர் சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொடர்ந்து நிர்வாகிகள் ஊர்வலமாக சென்று பேரூராட்சி செயல் அலுவலரிடம் வெண்ணந்தூர் பகுதியில் பேருந்து நிலையம் அமைக்க கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் வெண்ணந்தூர் ஒன்றிய தலைவர் அருள்-சுப்பிரமணி, வெண்ணந்தூர் பேரூர் நிர்வாகிகள் M.V.V.சரவணன், கந்தசாமி, மாவட்ட நிர்வாகிகள் M.விக்னேஸ்வரன், சிவகலை, வேல்முருகன், வெண்ணந்தூர் (மே) ஒன்றிய தலைவர் அருள்-சுப்பிரமணி, பேரூர் தலைவர் M.V.V.சரவணன், கந்தசாமி, நாமக்கல் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆ.பிரபு, தமிழன் ராஜ்குமார், விஜயகாளியப்பன், ஹரிஹரன், K.தமிழ்ச்செல்வன், வெண்ணந்தூர் ஒன்றிய இளைஞரணி தினகரன்,மானேஷ், பேரூர் இளைஞரணி ரவிக்குமார், மெய்யழகன், தினேஷ்குமார், நாமகிரிப்பேட்டை நிர்வாகிகள் முருகேசன்,பகவதி பிரபாகரன், அருண்குமார், மல்லசமுத்திரம் ஒன்றிய நிர்வாகிகள் கந்தசாமி, லோகேஷ்,கிருஷ்ணன், அரவிந்த், சீனு -ஜோதி, அரவிந்த், ராசிபுரம் நகர நிர்வாகிகள் M.Bபாக்கியராஜ்,கௌதம், பட்டணம் பிரதீப்-வாணி, வடுகம் ஒன்றிய நிர்வாகி சந்தோஷ், குருசாமிபாளையம் ஒன்றிய நிர்வாகிகள் வேலுபிரபாகரன், கமலக்கண்ணன், திருச்செங்கோடு நகர நிர்வாகிகள். நாகராஜ்,இப்ராஹிம்,சுந்தர் ,உதயகுமார், சத்தி யோகேஸ்வரன் விக்னேஸ்வரன், உதயகுமார், சுந்தர்,யோகேஸ்வரன் வழக்கறிஞர் செல்வகுமரன், வினோத்குமார், கௌரிசங்கர், சேந்தமங்கலம் நகர நிர்வாகிகள். பாஷா, சாரதி,பிரபு, ரகுபதி,மகளிரணி நிர்வாகிகள் முனீரா பானு,ஜனனி, கனிமொழி, மெகர்நிஷா, கஷ்தூரி, ரதிதேவி. ரதிபிரியா பிந்து - ஜஷ்வாரியா பிரியா, மற்றும் கழகத்தின் அனைத்து நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என 300.க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story