பிரதமராக இருந்தபோது மதச்சார்பின்மையை பேணி காத்தவர் வாஜ்பாய்: ஸ்டாலின் புகழாரம்
Chennai King 24x7 |25 Dec 2024 5:21 PM GMT
வாஜ்பாய் பிரதமர் பொறுப்பில் இருந்தபோது மதச்சார்பின்மையை பேணி காத்தவர் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
பாரத ரத்னா அடல் பிகாரி வாஜ்பாய் பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதுகுறித்து மு.க.ஸ்டாலின் தனது வலைப்பதிவில் தெரிவித்துள்ளதாவது: 'முன்னாள் பிரதமர் திரு. அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் நூறாவது பிறந்தநாளில் தமிழ்நாட்டின் உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக அவர் ஆற்றிய பங்களிப்பினையும், நமது தலைவர் கலைஞர் அவர்களுடன் அவர் கொண்டிருந்த நட்புறவினையும் நினைவுகூர்கிறோம். வலதுசாரிக் கருத்தியல் கொண்டவராக இருந்தாலும், பிரதமர் பொறுப்பில் இருந்தபோது நாட்டின் மதச்சார்பின்மைப் பண்பை அவர் பேணிக்காத்தார். அவரது வாழ்வும் பணியும் நிலைத்து நிற்கும்!' என அவர் தெரிவித்துள்ளார்.
Next Story