அரசு அதிகாரிகளின் கண்களில் மண்ணை தூவி தொடர் ரேஷன் அரிசி கடத்தல்! ரயிலில் கடத்த இருந்த ஒன்றரை டன் ரேஷன் அரிசி பறிமுதல்!*
Tirupathur King 24x7 |26 Dec 2024 1:12 AM GMT
அரசு அதிகாரிகளின் கண்களில் மண்ணை தூவி தொடர் ரேஷன் அரிசி கடத்தல்! ரயிலில் கடத்த இருந்த ஒன்றரை டன் ரேஷன் அரிசி பறிமுதல்!*
திருப்பத்தூர் மாவட்டம் அரசு அதிகாரிகளின் கண்களில் மண்ணை தூவி தொடர் ரேஷன் அரிசி கடத்தல்! ரயிலில் கடத்த இருந்த ஒன்றரை டன் ரேஷன் அரிசி பறிமுதல்!* திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த சோமநாயக்கன்பட்டி ரயில்வே கேட்டில் கௌக்காத்தில் பெங்களூர் செல்லும் விரைவு ரயில் தினம் தோறும் இரவு மற்றும் பகல் நேரங்களில் நின்று செல்வது வழக்கம் அந்த ரயிலில் திருப்பத்தூர், நாட்றம்பள்ளி ஜோலார்பேட்டை, சுற்றியுள்ள ரேஷன் அரிசி கடத்துபவர்கள் ரயில்வே கேட்டு அருகே ரேஷன் அரிசியை பதுக்கி வைத்து அந்த ரயிலில் கடத்தி வருவதல வாடிக்கையாக கொண்டு வருகின்றனர். இதனை அரசு அதிகாரிகள் கண்டும் காணாமல் மெத்தனப்போக்காகவும் செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் பட்டபகலில் இன்று ரேஷன் அரிசியை ரயில்வே கேட் அருகே உள்ள மதில் சுவர் மீது அடுக்கடுக்காக ரேஷன் அரிசியை வைத்திருந்தனர் இந்த நிலையில் அவளியாகச் சென்ற நபர் ஒருவர் ரேஷன் அரிசி கடத்து போவதாக கூறி வீடியோவை பதிவு செய்து சமூக வலைதளங்களில் பரவ செய்துள்ளார். இதன் காரணமாக அங்கு விரைந்து சென்ற நாட்றம்பள்ளி வட்ட வழங்கல் அலுவலர் ராமன் ரயிலில் கடத்த இருந்த சுமார் ஒன்றரை டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து பச்சூர் பகுதியில் உள்ள வாணிப கிடங்கில் ஒப்படைத்தார். மேலும் ரேஷன் அரிசி கடத்தும் நிகழ்வு தினம் தோறும் அப்பகுதியில் நடைபெற்று வருவதாகவும் இது குறித்து அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தாலும் எந்த நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை எனவும் மேலும் சமூக வலைத்தளங்களில் வீடியோ பரவியதன் காரணமாக தான் அதிகாரிகள் அங்கு சென்று ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர் எனவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் தொடர்ந்து ரேஷன் கடத்தும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது. பட்டப் பகலிலே ரேஷன் அரிசி சமூக விரோதிகள் கடத்தி வருகின்றனர் இதனை தெரிந்தும் தெரியாமல் அதிகரிகள் இருக்கின்றனரா? அல்லது ஏதேனும் வைட்டமின் வாங்கிக்கொண்டு கண்டும் காணாமல் உள்ளனரா? எனவும் கேள்வி எழுந்துள்ளது.
Next Story