ஜோலார்பேட்டை அருகே நிலத்தகராறில் தம்பி மற்றும் அவரது மனைவியை கத்தியால் வெட்டிய அண்ணன் கைது
Tirupathur King 24x7 |26 Dec 2024 1:20 AM GMT
ஜோலார்பேட்டை அருகே நிலத்தகராறில் தம்பி மற்றும் அவரது மனைவியை கத்தியால் வெட்டிய அண்ணன் கைது
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே நிலத்தகராறில் தம்பி மற்றும் அவரது மனைவியை கத்தியால் வெட்டிய அண்ணன் கைது திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடி ஊராட்சி கொல்லக் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் சீனு என்பவரின் மகன்கள் ராஜேந்திரன் (50), குமார் (45) இவர் திருப்பத்தூரில் தனது மனைவி பிள்ளைகளுடன் வசித்து வருகிறார். இவரது தந்தை சீனு என்பவர் நான்கு ஏக்கர் நிலத்தை ராஜேந்திரன் என்பவருக்கு இரண்டு ஏக்கரும் சிவகுமார் என்பவருக்கு இரண்டு ஏக்கரும் நிலத்தை பிரித்து கொடுத்துள்ளார். இந்த நான்கு ஏக்கர் நிலத்தில் 10 அடி அளவிலான நிலத்தகராறு இருவருக்கும் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகரவில் கைகலப்பாக மாறி இருவரும் படுகாயம் அடைந்து ஊர் பொதுமக்கள் நிலையில் சமரசம் செய்து கொண்டனர். இருந்தபோதிலும் கடந்த 15ஆம் தேதி திரும்பவும் அந்த பத்து அடி அளவிலான நிலத்தில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் ராஜேந்திரன் தனது தம்பியான குமார் மற்றும் அவருடைய மனைவி ஆனந்தியை கத்தியால் வெட்டியதில் இருவருடைய கையும் சிதலமடைந்து பலத்த காயம் ஏற்பட்டது இந்த நிலையில் குமார் தன்னுடைய அண்ணனான ராஜேந்திரனை ராடால் தாக்கியதில் அவருக்கு தலையில் 4 இடத்தில் காயம் ஏற்பட்டது. இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் பெரில் 108 ஆம்புலன்ஸ் மூலம் மூன்று பேரையும் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இவரை பரிசோதித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு மூன்று பேரையும் அனுப்பி வைத்தனர். இது குறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து வந்த நிலையில் இன்று ராஜேந்திரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்..
Next Story