சேலத்தில் இலவச ஓமியோபதி, பிசியோதெரபி மருத்துவ முகாம்
Salem King 24x7 |26 Dec 2024 1:30 AM GMT
இன்றும் நடக்கிறது
சேலம் அண்ணா பூங்கா அருகில் உள்ள ஆயுஷ் மல்டி ஸ்பெஷாலிட்டி ஹோமியோபதி கிளினிக் சார்பில் இலவச ஓமியோபதி மற்றும் பிசியோதெரபி மருத்துவ முகாம் சேலம் மரவனேரி பிரபஞ்ச அமைதி சேவாஸ்ரமம் ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் நேற்று நடந்தது. இதில், ஏராளமானோர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு டாக்டர்கள் சதீஷ்குமார், புவனேஸ்வரி ஆகியோர் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து ஆயுஷ் மல்டி ஸ்பெஷாலிட்டி ஹோமியோபதி கிளினிக்கில் இன்று (வியாழக்கிழமை) ஓமியோபதி மற்றும் பிசியோதெரபி மருத்துவ முகாம் நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் சலுகை விலையில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படும். முகாமில், மருத்துவர் ஆலோசனை, பிசியோதெரபி, ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரை, உடல் எடை உயரம் மற்றும் 10 நாட்களுக்கு தேவையான மருந்து மாத்திரைகள் வழங்கப்பட உள்ளதாக டாக்டர் சதீஷ்குமார், புவனேஷ்வரி ஆகியோர் தெரிவித்தனர்.
Next Story