அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை சார்பில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்

அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை சார்பில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்
கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்த மாணவர்கள்
சேலம் விநாயகா மிஷனின் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் நுண்கலை அமைப்பின் சார்பில் கிறிஸ்துமஸ் விழா கல்லூரி வளாகத்தில் கொண்டாடப்பட்டது. விழாவில் துறையின் டீன் செந்தில்குமார் முன்னிலை வகித்து கிறிஸ்துமஸ் தினத்தின் சிறப்புகள் குறித்து மாணவர்களிடையே விரிவாக பேசினார். தொடர்ந்து துறையை சேர்ந்த மாணவர்கள், பேராசிரியர்கள் பைபிள் வாசித்து பிரார்த்தனை செய்தனர். மேலும் இயேசு கிறிஸ்துவின் பிறப்பு குறித்த நாடகம், கரோல்ஸ், பாடல், கலை நிகழச்்சிகள் துறையை சேர்ந்த மாணவர்களால் நடத்தப்பட்டது. விழாவில் துறை மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் குடில் அமைத்து, கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து வந்திருந்தனர். விழாவின் நிறைவாக கேக் வெட்டப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை துறையின் நுண்கலை அமைப்பின் ஆலோசகர் உமா மகேஸ்வரி, ஒருங்கிணைப்பாளர்கள் ஆண்டனி ரூபன், ராஜஸ்ரீ, சகாய மெரினா, ராகுல், அல்போன்ஸ், ஆண்டனி காட்சன், லிங்கா, மெர்லின், கிங்ஸ்லி, ஷில்பா ஆகியோர் செய்திருந்தனர்.
Next Story