எஸ்பி தலைமையில் மக்கள் குறைத்தீர் முகாம்
Dharmapuri King 24x7 |26 Dec 2024 1:36 AM GMT
தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைத்தீர் முகாம் மாவட்ட எஸ்பி தலைமையில் நடைபெற்றது
தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் நேற்று 25.12.2024 ஆம் தேதி தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன்,B.com.,BL., அவர்களின் தலைமையில் பொதுமக்களின் குறை தீர்க்கும் முகாம் (பெட்டிஷன் மேளா) நடைபெற்றது. இந்நிகழ்வில் தருமபுரி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக குற்றத் தடுப்புப் பிரிவு) மு.ஸ்ரீதரண் மற்றும் காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர். இப்பெட்டிஷன் மேளாவில் பொதுமக்களால் வழங்கப்பட்ட 60 மனுக்கள் மீது விசாரணை செய்யப்பட்டு, 60 மனுக்களுக்கும் தீர்வு காணப்பட்டது. மேலும் இன்று புதிதாக 09 மனுக்கள் பெறப்பட்டன.
Next Story