சுனாமி நினைவு தினம் பென்னாகரம் எம்எல்ஏ அறிக்கை
Dharmapuri King 24x7 |26 Dec 2024 2:13 AM GMT
சுனாமி (ஆழிப்பேரலை) 20ஆம் ஆண்டு நினைவு தினம் பென்னாகரம் எம்எல்ஏ ஜிகே. மணி நினைவு அஞ்சலி அறிக்கை
2004 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 26 ஆம் நாள் சுனாமி (ஆழிப்பேரலை ) யின் கோரத் தாண்டவத்தின் கொடூரத்தால் சென்னை மெரினாக் கடற்கரையிலிருந்து கன்னியாகுமரியின் கொட்டில்பாடு கிராமம் வரை பல்லாயிரக்கணக்கானவர்கள் உயிரிழப்பு, வீடுகள் - உடமைகள் எல்லாம் இழப்பு என சொல்லிமாளா சோகக் கதை நடந்த நாள். நாகை மாவட்டம் நாகை, வேளாங்கன்னி, பூம்புகார் ஆகிய இடங்களில் மட்டும் 6,065 பேர் உயிரிழந்துள்ளனர். இதேபோல் சென்னை முதல் கன்னியாகுமரி வரை பல்லாயிரம் பேர் உயிரிழப்பு ஒரே நாளில் அந்த நாளை நினைவு கூறும்போது பேரதிர்ச்சியும் வேதனையும் கவலைகொள்ளச் செய்கிறது. அந்தக் கொடூர சுனாமியில் உயிரிழந்தவர்களுக்கு இன்று நினைவஞ்சலி செலுத்துகிறோம் என்று பென்னாகரம் எம்எல்ஏ மற்றும் பாமக கௌரவ தலைவர் ஜி கே மணி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Next Story