டிராக்டர் ஓட்டுநர் படுகொலை காவலர்கள் விசாரணை

டிராக்டர் ஓட்டுநர் படுகொலை காவலர்கள் விசாரணை
பஞ்சப்பள்ளியில் ஆற்று பாலம் அருகாமையில் டிராக்டர் ஓட்டுநர் படுகொலை காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பஞ்சப்பள்ளி ஆற்றுப்பாலம் பகுதியில் டிசம்பர் 25 நேற்று இரவு ஆண் சடலம் இருப்பதாக பஞ்சப்பள்ளி காவல் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் பேரில் மாரண்டஅள்ளி காவல் ஆய்வாளர் சுப்பிரமணி தலைமையில் காவலர்கள் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவலர்கள் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்ட நபர் கிருஷ்ணகிரி மாவட்டம் துஞ்சிய பள்ளியை சேர்ந்த டிராக்டர் ஓட்டுநர் ரகு என்பது தெரியவந்தது மேலும் காவலர்கள் விசாரணையில் இவர் கொலை செய்யப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது மேலும் இது குறித்து காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story