தென்காசி கோவிலில் கும்பாபிஷேகம் அறிவிப்பு

தென்காசி கோவிலில் கும்பாபிஷேகம் அறிவிப்பு
கோவில் கும்பாபிஷேகம் அறிவிப்பு
தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற காசி விசுவநாதர் கோயில் உள்ளது. இங்கு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் இந்த கோவிலின் புனரமைப்பு பணிகள் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வருகிற ஏப்ரல் 7-ம் தேதி காசி விசுவநாதர் கோவிலின் மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதாக கோவில் சார்பாக தெரிவிக்கப்பட்டது. இதனால் காசி விசுவநாதர் கோவில்களில் பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story