கிருஷ்ணகிரி தூய பாத்திமா அன்னை திருத்தலத்தில் கிறிஸ்துமஸ் விழா.
Krishnagiri King 24x7 |26 Dec 2024 3:06 AM GMT
கிருஷ்ணகிரி தூய பாத்திமா அன்னை திருத்தலத்தில் கிறிஸ்துமஸ் விழா.
கிருஷ்ணகிரி தூய பாத்திமா அன்னை திருத்தலத்தில், நல்லிரவு கிறிஸ்து பிறப்பு சிறப்பு பிரார்த்தனை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. திருத்தல பங்குத்தந்தை அருட்திரு. இசையாஸ் தலைமையில் நடைபெற்றது. இந்த சிறப்பு பிரார்த்தனையின் கிறிஸ்து பிறப்பு சிறப்பு விழிபாட்டில் ஈடுபட்டனர். மேலும் தேவாலயத்தின் உட்புறமும், வெளிப்புறமும் இயோசு பாலகனின் பிறப்பை உணர்த்தும் வகையில் குடில்கள் அமைக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து தேவாலயத்தில் உலக நன்மைக்காகவும், உலக மாந்தர் அனைவரும் நலமுடன் வாழவும், அன்பு சமாதானத்தில் திளைத்திடவும் குருக்கள் சிறப்பு பிரார்த்தனைகளை மேற்கொண்டனர். இந்த சிறப்பு பிரார்த்தனையில் திரளானோர் புத்தாடைகளை அணிந்து கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் கலந்துக்கொண்டனர். இதில் அனைவரும் தங்களுக்குள் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை, ஒருவருக்கு ஒருவர் பரிமாறிக்கொண்டனர்.
Next Story