கஞ்சா விற்பனை செய்த இரு வாலிபர்கள் கைது

கஞ்சா விற்பனை செய்த இரு வாலிபர்கள் கைது
கைது
தியாகதுருகத்தில் கஞ்சா விற்பனை செய்த இரு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். தியாகதுருகம் சப் இன்ஸ் பெக்டர் ஞானசேகர் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு தியாகதுருகம் - கலையநல்லுார் செல்லும் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது சந்தேகம்படியாக டிவிஎஸ் ஸ்டார் சிட்டி பைக்கில் நின்றிருந்த வாலிபர்களை பிடித்து சோதனை செய்தனர். அதில், அவர்கள் கஞ்சா விற்பனை செய்தது தெரிந்தது. இதனையடுத்து போலீஸ் விசாரணையில் வாணாபுரம் அடுத்த பழைய பல்லகச்சேரி சேர்ந்த பாண்டுரங்கன் மகன் கிருஷ்ணமூர்த்தி, 39; தியாகதுருகம் காந்தி நகர் சேர்ந்த ஜோதிமணி மகன் சுரேந்தர், 25; என்பது தெரிந்தது. இதனையடுத்து அவர்களிடமிருந்து 50 கிராம் கஞ்சா மற்றும் பைக்கினை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர்.
Next Story