கபடி பயிற்றுநர் விண்ணப்பிக்கலாம்

கபடி பயிற்றுநர் விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பிக்கலாம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் கேலோ இந்தியா கபடி மாவட்ட பயிற்சி மையம் தியாகதுருகம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் செயல்பட்டு வருகிறது.இந்த பயிற்சி மையத்திற்கு தற்போது புதிய கபடி பயிற்றுநர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். மாவட்டத்தில் உள்ள சர்வதேச மற்றும் தேசிய அளவில் பதக்கம் பெற்ற கபடி விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் வரும் ஜன. 4ம் தேதிக்குள் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகதை அணுக வேண்டும். அலுவல் நேரத்தில் சுயவிவரம் மற்றும் சான்றிதழ்களின் நகல்களை நேரிலோ அல்லது தபால் மூலமாக அனுப்ப வேண்டும். கூடுதல் விவரங்கள் பெற மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரின் 7401703474 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
Next Story