தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாடு
Kallakurichi King 24x7 |26 Dec 2024 4:57 AM GMT
வழிபாடு
கள்ளக்குறிச்சி பகுதியில் உள்ள தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி நேற்று நள்ளிரவு கள்ளக்குறிச்சி நேபால் தெரு புனித ஜெபமாலை அன்னை ஆலயத்தில் திருப்பலி நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் கன்னிமரியாள், சூசையப்பர், குழந்தை ஏசு, மூன்று ஞானிகள், குடிலில் எழுந்தருளச் செய்து சிறப்பு பிரார்த்தனை நடந்தது. தொடர்ந்து இரவு 12:00 மணிக்கு ஆடம்பர திருப்பலி நடந்தது. ஆலய பங்கு தந்தை அந்தோணிராஜ் திருப்பலி நிகழ்ச்சியை செய்து வைத்தார். அதேபோல் கள்ளக்குறிச்சி ஆற்காடு லுத்தரன் திருச்சபை பெதஸ்தா ஆலயத்தில் நடந்த திருப்பலி நிகழ்ச்சியில், ஆலயத்தில் அமைத்திருந்த குடிலில் இயேசு கிறிஸ்துவை எழுந்தருள செய்து சிறப்பு பிரார்த்தனை செய்தனர். வழிபாட்டினை ஆலய போதகர் தங்கதுரை செய்துவைத்தார். சபை ஊராட்சி உறுப்பினர்கள் மற்றும் சபையின் மூத்த உறுப்பினர்கள் ஒருங்கிணைந்து வழிபாடு நடத்தினர். கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி புத்தாடைகள் அணிந்து ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர். மேலும் தேவாலயங்கள் வண்ண மின் விளக்குகளால் ஆலயம் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தது. கள்ளக்குறிச்சி பகுதியில் உள்ள தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி நேற்று நள்ளிரவு கள்ளக்குறிச்சி நேபால் தெரு புனித ஜெபமாலை அன்னை ஆலயத்தில் திருப்பலி நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் கன்னிமரியாள், சூசையப்பர், குழந்தை ஏசு, மூன்று ஞானிகள், குடிலில் எழுந்தருளச் செய்து சிறப்பு பிரார்த்தனை நடந்தது. தொடர்ந்து இரவு 12:00 மணிக்கு ஆடம்பர திருப்பலி நடந்தது. ஆலய பங்கு தந்தை அந்தோணிராஜ் திருப்பலி நிகழ்ச்சியை செய்து வைத்தார். அதேபோல் கள்ளக்குறிச்சி ஆற்காடு லுத்தரன் திருச்சபை பெதஸ்தா ஆலயத்தில் நடந்த திருப்பலி நிகழ்ச்சியில், ஆலயத்தில் அமைத்திருந்த குடிலில் இயேசு கிறிஸ்துவை எழுந்தருள செய்து சிறப்பு பிரார்த்தனை செய்தனர். வழிபாட்டினை ஆலய போதகர் தங்கதுரை செய்துவைத்தார். சபை ஊராட்சி உறுப்பினர்கள் மற்றும் சபையின் மூத்த உறுப்பினர்கள் ஒருங்கிணைந்து வழிபாடு நடத்தினர். கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி புத்தாடைகள் அணிந்து ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர். மேலும் தேவாலயங்கள் வண்ண மின் விளக்குகளால் ஆலயம் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தது.
Next Story