மின்சார தடை

மின்சார தடை
ஈரோடு மாவட்டத்தில் நாளை (டிச.27ம் தேதி) மின்சாரம் நிறுத்தப்படும் இடங்களின் விவரம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள கணபதிபாளையம், கோபி அருகே உள்ள அளுக்குளி மற்றும் பவானிசாகர் அருகே உள்ள பெரியகள்ளிப்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (டிசம்பர் 27ம் தேதி) வெள்ளிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால், நாளை கீழ்க்கண்ட இந்தப் பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது என ஈரோடு தெற்கு மின் விநியோக செயற்பொறியாளர் நாச்சிமுத்து, கோபி மின்சார வாரிய செயற்பொறியாளர் குலசேகர பாண்டியன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.மொடக்குறிச்சி கணபதிபாளையம் துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை):- மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்:- ஆயிக்கவுண்டன் பாளையம், கணபதிபாளையம், சானார்பாளையம், வேலம்பாளையம், சின்னம்மாபுரம், பஞ்சலிங்கபுரம், என்.ஜி.புதூர், காங்கேயம்புரம், பாசூர், பச்சாம்பாளையம், சோளங்கபாளையம், ஈஞ்சம்பள்ளி, வாத்திகாடுவலசு, கொமரம்பாளையம், ராக்கியா பாளையம், கல்யாணிபுரம், களத்து மின்னப்பாளையம், பழனிக்கவுண்டன்பாளையம், முனியப்பம்பாளையம்,வேங்கியம்பாளையம், உத்தரண்டிபாளையம்,சாக்கவுண்டம்பாளையம், மன்னாதம்பாளையம்,முத்துக்கவுண்டம்பாளையம், ஆர்.கே.ஜி.புதூர், கிளாம்பாடி மற்றும் செட்டிகுட்டைவலசு. கோபி அளுக்குளி துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை):- மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்:- அளுக்குளி, கோட்டுப்புள்ளாம்பாளையம், ஆண்டவர் மலை, பூதிமடை புதூர், ஒட்டர்கரட்டுப்பாளையம், வெங்கமேட்டு புதூர், சத்தியமங்கலம் பிரிவு, கோரமடை, கரட்டுப்பாளையம், எம்.ஜி.ஆர். நகர், கணபதிபாளையம், காசியூர், கோபிபாளையம், அம்பேத்கர் நகர், மூலவாய்க்கால், ராஜீவ்காந்தி நகர் மற்றும் போடிசின்னாம்பாளையம்.. பவானிசாகர் பெரியகள்ளிப்பட்டி துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):- மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்:- அய்யம்பாளையம், பெரியகள்ளிப்பட்டி, சித்தன்குட்டை, மல்லியம்பட்டி, ஜெ.ஜெ.நகர் மற்றும் பருசாபாளையம் ஆகிய இடங்களில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story