ரிஷிவந்தியத்தில் கஞ்சா விற்ற மூன்று பேர் கைது

ரிஷிவந்தியத்தில் கஞ்சா விற்ற மூன்று பேர் கைது
கைது
ரிஷிவந்தியம் அடுத்த பாவந்துார் பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக, மாவட்ட தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் நேற்று முன்தினம் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக மொபட்டில் வந்தவரை நிறுத்தி சோதனை செய்தனர்.அதில், பைக்கில் வந்தவர் கீழ்பாடியை சேர்ந்த தண்டபாணி மகன் குருபால்,30; என்பதும், மொபட்டில் 250 கிராம் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, குருபாலனை ரிஷிவந்தியம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். ரிஷிவந்தியம் போலீசார் குருபாலிடம் விசாரணை செய்தனர். அதில், கீழ்பாடியை சேர்ந்த ரிச்யாதவ் மகன் ஆதேஷ்,45; என்பவர் டெல்லியில் இருந்து கஞ்சா வாங்கி வந்து விற்றதும், இதில், பாவந்துாரை சேர்ந்த கலியன் மகன் ரஜினி,36; என்பவருக்கு தொடர்பு இருப்பதாகவும் குருபால் தெரிவித்தார். இதையடுத்து, குருபால், ஆதேஷ் மற்றும் ரஜினி ஆகிய 3 பேரையும் ரிஷிவந்தியம் போலீசார் கைது செய்தனர். 250 கிராம் கஞ்சா மற்றும் டி.வி.எஸ்., மொபட் பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story