தோட்டக்கலை துறை திட்ட விளக்கக் கூட்டம்

தோட்டக்கலை துறை திட்ட விளக்கக் கூட்டம்
கூட்டம்
சங்கராபுரம் அடுத்த செம்பராம்பட்டில் மணிமுத்தா நதி உப வடி நிலப்பகுதி திட்ட விழிப்புணர்வு விளக்க கூட்டம் நடந்தது. வேளாண்மை உதவி இயக்குனர் ஆனந்தன் தலைமை தாங்கினார். பயிற்சிக்கு தோட்டக்கலை உதவி இயக்குனர் சத்யராஜ், வேளாண்மை அலுவலர் மோகன்ராஜ், துணை வேளாண்மை அலுவலர் முருகேசன் முன்னிலை வகித்தனர்.உதவி வேளாண்மை அலுவலர் பழனிவேல் வரவேற்றார். கூட்டத்தில் வேளாண்மை துறை திட்டங்கள் தொடர்பாக மண் மாதிரி, மண்வளம், உழவன் செயலி, இயற்கை விவசாயம், இயற்கை வேளாண் இடுபொருள்கள் பயன்படுத்துதல், மற்றும் நுண்ணுயூட்ட பயன்பாடுகள் மற்றும் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், தோட்டக்கலை துறை திட்டம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் உதவி விதை அலுவலர் துரை, பயிர் அறுவடை பரிசோதனை அலுவலர்கள் ராகவன், வல்லரசு உட்பட விவசாயிகள் பலர் பங்கேற்றனர். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை ஊராட்சி தலைவர் வைத்தியநாதன் செய்திருந்தார். ஆத்மா திட்ட தொழில்நுட்ப மேலாளர் மவிசுதா நன்றி கூறினார்.
Next Story