தேசிய கூடைப்பந்து போட்டியில் தமிழக அணி வெற்றி!
Thoothukudi King 24x7 |26 Dec 2024 5:36 AM GMT
ஐதராபாத்தில் நடந்த தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டியில் தமிழக அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதில் தூத்துக்குடியைச் சேர்ந்த 5 வீராங்கனைகள் இடம்பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐதராபாத்தில் நடந்த தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டியில் தமிழக அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதில் தூத்துக்குடியைச் சேர்ந்த 5 வீராங்கனைகள் இடம்பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் தேசிய அளவிலான 13 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான கூடைப்பந்து போட்டிகள் டிச.15 முதல் 22ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில், தமிழகம் உட்பட 24 மாநில அணிகள் பங்கு பெற்றன. இறுதி போட்டியில் தமிழ்நாடு அணி மற்றும் மகராஷ்ட்ரா அணிகள் மோதின. இதில், 68-46 என்ற புள்ளிக் கணக்கில் தமிழக அணி வெற்றி பெற்றது. இறுதி போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்ற தமிழக அணிக்கு ரூ.3லட்சம் பரிசு மற்றும் கோப்பை வழங்கப்பட்டது. தமிழக அணியில் தூத்துக்குடியைச் சேர்ந்த மெர்சி அனுஸ்மா, ஹர்ஷவர்த்தினி, லக்க்ஷனா அபி, கிராஸ்னி, ரியோனா ஆகிய வீராங்கனைகள் பங்குபெற்றனர். தூத்துக்குடியைச் சார்ந்த பிரதீப் மெண்டிஸ் தலைமை பயிற்சியாளராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story