சாலை ஓரத்தில் உள்ள முதியவர்களுக்கு போர்வையை வழங்கினர்.
Thoothukudi King 24x7 |26 Dec 2024 5:59 AM GMT
தூத்துக்குடி பியர்ல்சிட்டி பத்திரிக்கையாளர் சங்கம் மற்றும் ஆல் கேன் டிரஸ்ட் சார்பில் இரவு நேரத்தில் சாலை ஓரமாக உறங்கும் ஆதரவற்றோருக்கு மேயர் ஜெகன் பெரியசாமி போர்வை வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரத்தில் பணி அதிகம் இருப்பதால் சாலை ஓரத்தில் உறங்கும் ஆதரவற்ற முதியவர்கள் மற்றும் வீடு இல்லாதோர் சாலை ஓரத்தில் உறங்குகின்றனர். அவர்கள் தற்போது அதிக அளவில் பனி பொழிவதால் இரவு நேரத்தில் உறங்குவதற்கு மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். ஆகையால் தூத்துக்குடி பியர்ல்சிட்டி பத்திரிக்கையாளர் சங்கம் மற்றும் ஆல் கேன் டிரஸ்ட் சார்பில் தூத்துக்குடி மாநகர பகுதியில் சாலை ஓரத்தில் உறங்கும் ஆதரவற்ற முதியவர்களுக்கு போர்வையை ஜெகன் பெரியசாமி வழங்கி துவங்கி வைத்தார். அவருடன் இந்த நிகழ்ச்சியில் ஆல் கேன் டிரஸ்ட் நிறுவனரும் அரசு தலைமை வழக்கறிஞர் மோகன்தாஸ், பியர்ல்சிட்டி பத்திரிக்கையாளர் சங்க செயலாளர் காட்சன், துணை தலைவர் ஷேக் மதார், ஜெயக்குமார், இன்பராஜ், தமிழன்டா கலைக்குழு ஜெகஜீவன், மற்றும் செந்தில்குமார், கேசவன், அருண்குமார், ரகுபதி, செல்வம், சுடலைமுத்து, பிரைட் , விக்னேஷ், பிரசன்னா, ஆனந்த கணேஷ், மருதபெருமாள், ஜெயராஜ், வேல்முருகன், மதன், கோபி ஐயப்பன், ராம் மோகன், சோலையப்பன் சற்குணராஜ் பால்ராஜ் நாராயணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், வேம்படி இசக்கி அம்மன் கோவில், பனிமய மாதா கோவில், சிவன் கோவில் ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரத்தில் உறங்கும் முதியவர்கள் மற்றும் வீடு இல்லாமல் தங்கிய மக்களுக்கு போர்வை வழங்கினர்.
Next Story