மதுராந்தகம் அருகே கொடூர விபத்து, மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பலி

மதுராந்தகம் அருகே கொடூர விபத்து, மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பலி
மதுராந்தகம் அருகே கார் கொடூர விபத்து : மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பலி செங்கல்பட்டு மாவட்டம் புக்கத்துறை கூட்டுச்சாலை அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், சென்னையை சேர்ந்த குடும்பத்தினர் காரில் திண்டுக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தனர். எதிரே வந்த கார் தனது கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி எதிர்சலையில் வந்த, காரில் மோதியதில் காரில் பயணித்த ஓட்டுனர் கணபதி, சிறுவன் பாலா (10), சிறுமி, ஹேமா (13) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஜெயா சரண்யா தியா (3) ஆசிய மூன்று பேரை மீண்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக படாளம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்இந்த சாலை விபத்து நள்ளிரவு பெய்து வந்த மிதமான மழை காரணமாக ஏற்பட்ட சாலை விபத்து என தெரிய வருகிறது.
Next Story