சங்கரன்கோவில் அருகே குளத்தில் மூழ்கி விவசாயி பலி

சங்கரன்கோவில் அருகே குளத்தில் மூழ்கி விவசாயி பலி
குளத்தில் மூழ்கி விவசாயி பலி
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே செந்துட்டியாபுரம் கிராமத்தைச் சேர்ந்த கருப்பசாமி என்ற விவசாயி இன்று காலையில் குளத்தில் மீன் பிடிக்க சென்ற போது எதிர்பாரவிதமாக குளத்தில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுக்கண்டா பகுதி பொதுமக்கள் சங்கரன்கோவில் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர், விரைந்து சென்ற தீயணைப்பு நிலை அலுவலர் செல்வம் தலைமையில் குளத்தில் மூழ்கியவரை பல மணி நேரம் போராடி பின்பு உடலை மீட்டனர். உடலை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story