குமரி : கடனை திருப்பி கேட்ட கொத்தனார் அடித்து கொலை
Nagercoil King 24x7 |26 Dec 2024 6:23 AM GMT
கருங்கல்
குமரி மாவட்டம் பாலூர் பகுதியை சேர்ந்தவர் சாம் டேனியல் ராஜ் (37). கொத்தனார். இவரிடம் இருந்து பாலூர் பகுதியைச் சேர்ந்த கொத்தனார், சுரேஷ்குமார் (33) என்பவர் 5 ஆயிரம் கடன் வாங்கி உள்ளார். நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு கொடுத்த பணத்தை திருப்பி கேட்க சேம் டேனியல் ராஜ் என்பவர் சுரேஷ்குமார் வீட்டிற்கு சென்றுள்ளார். இது சுரேஷ்குமார் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அப்போது ஏற்பட்ட தகராறில் கட்டையால் சேம் டேனியல் தலையில் சுரேஷ்குமார் ஓங்கி அடித்தார். படுகாயம் அடைந்த சேம் டேனியல் குமரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று (25-ம் தேதி) மாலையில் சேம் டேனியல் ராஜ் உயிரிழந்தார். இது குறித்து கருங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து சுரேஷ்குமாரை கைது செய்தனர்.
Next Story