குமரி : கிறிஸ்மஸ் நாளில் கடலில் மூழ்கி மாணவன் உயிரிழப்பு
Nagercoil King 24x7 |26 Dec 2024 6:27 AM GMT
மணவாளக்குறிச்சி
குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே கீழ கடியப்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் அந்தோணி ராஜ் மகன் ஹார்லின் டேவிட்சன் (15). நேற்று மதியம் தனது நண்பர்களுடன் வீட்டருகே உள்ள கடலில் குளித்துக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் ஹார்லின் டேவிட்சன் உட்பட மூன்று சிறுவர்களை திடீரென ராட்சத அலை இழுத்து சென்றது. இதனைப் பார்த்த மீனவர்கள் உடனே கடலில் குதித்து இரண்டு சிறுவர்களை காப்பாற்றினார்கள். ஆனால் ஹார்லின் டேவிட்சனை மீட்க முடியவில்லை. இதனை தொடர்ந்து மீனவர்கள் தீவிரமாக தேடி ஹார்லின் டேவிட்சனை பிணமாக மீட்டனர். இது குறித்து குளச்சல் மரைன் போலீசருக்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீசார் உடலை மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மாணவன் ஹாலின் டேவிட்சன் மனவளக்குறிச்சியில் உள்ள ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story