அழகர் கோவிலில் "நாள் முழுவதும் அன்னதானம்" திட்டம் தொடக்கம்.

மதுரை அழகர் கோவிலில் நாள் முழுவதும் அன்னதானம் திட்டம் தொடங்கியது.
தமிழக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் காணொளி காட்சி மூலம் மதுரை மாவட்டம் அழகர் கோயில் அருள்மிகு கள்ளழகர் திருக்கோயிலில் " நாள் முழுவதும் அன்னதான திட்டத்தை இன்று (டிச.26)தொடங்கி வைத்தார்கள். அதனைத் தொடர்ந்து மதுரை அழகர் கோயில் ,அருள்மிகு கள்ளழகர் திருக்கோயிலில் இன்று தொடங்கிய அன்னதானத்தை வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி பக்தர்களுக்கு பரிமாறி உணவருந்தினார்கள். உடன் மாவட்ட ஆட்சியர் தலைவர், கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story