சத்தியமங்கலத்தில் மத நல்லிணக்க கிறிஸ்துமஸ் விழா இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
Bhavanisagar King 24x7 |26 Dec 2024 7:14 AM GMT
சத்தியமங்கலத்தில் மத நல்லிணக்க கிறிஸ்துமஸ் விழா இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
சத்தியமங்கலத்தில் மத நல்லிணக்க கிறிஸ்துமஸ் விழா இனிப்பு வழங்கி கொண்டாட்டம் உலகம் முழுவதும் நேற்று கிறிஸ்துமஸ் பண்டிகை கொண் டாடப்பட்டது. இதையொட்டி தேவாலயங்களில் நடை பெற்ற சிறப்பு பிரார்த்தனையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும் கேக்வழங்கி ஒருவருக்கொருவர் கிறிஸ் துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர். அதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. சத்தியமங்கலம் வடக்குப்பேட்டை யில் உள்ள புனித அருளானந்தர் ஆலயத்தில் நேற்று காலை 9 மணிக்கு மத நல்லிணக்க சமத்துவ கிறிஸ்துமஸ் விழா நடந் தது இதையொட்டி பங்குத்தந்தை ரோசாரியோ மற்றும் பாதிரியார்டோனி மார்சல் ஆகியோருக்கு அங்கு கூடியிருந்த இந்து, முஸ்லிம்கள் ரோஜா பூ, இனிப்பு வழங்கி கிறிஸ்துமஸ் விழா கொண்டாடினார்கள். மேலும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்ளையும் தெரிவித்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் தண்டு மாரியம்மன் கோவில் பூசாரி கோபாலகிருஷ்ணன், பல்சமய நல்லுறவு இயக்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் எஸ்.ஐமேஷ், கவிமணி மற்றும் மாவட்ட துணைத்தலைவர் சேவியர், நகர தலைவர் முகமதுபாரூக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
Next Story