மாணவிகள் மீதான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரிப்பு: அண்ணா பல்கலை. சம்பவத்துக்கு தலைவர்கள் கண்டனம்

மாணவிகள் மீதான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரிப்பு: அண்ணா பல்கலை. சம்பவத்துக்கு தலைவர்கள் கண்டனம்
அண்ணா பல்கலை. வளாகத்​தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்​கப்​பட்ட சம்பவத்​துக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரி​வித்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் கூறி​யிருப்​ப​தாவது: அதிமுக பொதுச்​செய​லாளர் பழனிசாமி: டெல்​லி​யில் நிர்பயா சம்பவம் நடந்து 12 ஆண்டுகள் கழித்து, அதே போன்று ஒரு சம்பவம் தமிழகத்​தில் நடப்பது என்பது, சட்டம் ஒழுங்கை முதல்வர் ஸ்டா​லின் பின்​நோக்கி தள்ளி​யிருப்​ப​தையே காட்டு​கிறது. பெண்கள் படிப்பு மற்றும் பணியிடங்​களில் கூட பாது​காப்பாக இருக்க முடியாத அளவுக்கு சட்டம் ஒழுங்கை கெடுத்​துள்ள திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். உடனடியாக குற்​றவாளிகளை கைது செய்​வதுடன் அவர்​களுக்கு உச்சபட்ச தண்டனை கிடைப்பதை உறுதி​செய்​யு​மாறு வலியுறுத்து​கிறேன். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: தமிழகத்தில் இதுவரை கேட்காத விஷயங்களை கேட்டுக் கொண்​டிருக்கிறோம். ரத்தம் கொதிக்​கிறது. சட்டம் ஒழுங்கு செத்து​விட்​டது. காவல்​துறை​யில் அரசியலை கலந்து விட்​டார்​கள். ஒவ்வொரு குற்ற​மும் தமிழகத்​தில் போட்​டிப்​போட்டுக் கொண்டு நடக்​கிறது. காவல்​துறையும், காவல்​துறைக்கு பொறுப்பான முதல்​வரும் மாணவி மீதான பாலியல் தாக்குதலுக்கு முழு பொறுப்​பேற்று, மக்களுக்கு விளக்​கமளிக்க வேண்டும். பாமக நிறு​வனர் ராமதாஸ்: அனைத்து காவலையும் மீறி மனித மிரு​கங்கள் பல்கலைக்கழக வளாகத்​துக்​குள் நுழைந்து ஒரு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தது எப்படி? பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்பு இல்லை, மாணவிகளே பாலியல் வன்கொடுமை​களுக்கு ஆளாகின்​றனர் என்றால் இனி எந்த பெற்​றோர் தங்களின் மகள்களை அண்ணா பல்கலைக்​கழகத்​துக்கு அனுப்பு​வார்​கள். இது பெண் கல்விக்கு பெருந்​தடையாக மாறி விடாதா? சரியான நேரத்​தில் தக்க தண்டனையை திமுக அரசுக்கு மக்கள் அளிப்​பார்​கள். தவெக தலைவர் விஜய்: மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தவர் மீது விரைவாக உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும். ஒவ்வோர் ஆண்டும் ஒதுக்கப்படும் நிர்பயா நிதியை பயன்படுத்தி அனைத்து இடங்களிலும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். மனவலிமையுடன் தங்களை தாங்களே தற்காத்து கொள்வது தொடர்பாக போதிய சட்ட உதவி மற்றும் உளவியல் சார்ந்து விழிப்புணர்வை கல்வி பயிலும் காலக்கட்டத்திலேயே பெண்களுக்கு அரசு ஏற்படுத்த வேண்டும். மார்க்​சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பால​கிருஷ்ணன்: தமிழகத்தில் பெண்​கள், குழந்தைகள் மீது, குறிப்​பாக கல்விக்​கூடங்களில் மாணவிகள் மீதான பாலியல் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருவது கவலை​யளிக்​கிறது. அண்ணா பல்கலைக்​கழகம் உள்ளிட்ட கல்வி நிலையங்​கள், விடு​திகள் அனைத்​திலும் பயிலும் மாணவி​களுக்கு பாது​காப்பான சூழலை உருவாக்க வேண்​டும். இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்: கூட்டு பாலியல் வன்தாக்குதலில் குற்றவாளிகள் ஈடுபட்டுள்ளனரா என்பது போன்ற பல வினாக்கள் எழுகின்றன. இச்சம்பவம் தொடர்பான அனைவரும் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படுவதை காவல் துறை உறுதி செய்ய வேண்டும். இதேபோன்று, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா,தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்​முரு​கன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்​கிணைப்​பாளர்சீமான், வி.கே.சசிகலா உள்ளிட்டோரும் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Next Story