குமரி : பேத்தியை பார்க்க சென்ற மூதாட்டி மாயம்
Nagercoil King 24x7 |26 Dec 2024 7:23 AM GMT
சீதப்பால் அருகே
குமரி மாவட்டம் தாழக்குடி, சீதப்பால் பகுதியை சார்ந்த பிரான்சிஸ் என்பவர் மனைவி சவ்ரியாய் (85) இவருக்கு இரு மகன்கள் உள்ளனர். இருவரும் கொத்தனார் வேலை செய்து வருகின்றனர். இவரது கணவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த நிலையில் இவர் தனது இரண்டாவது மகனான சபரி முத்துவுடன் வசித்து வருகிறார். சபரிமுத்துவின் மகள் சந்தியாவை கருங்கல் பகுதியில் திருமணம் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று மாலை சுமார் 3.30 மணியளவில் சீதப்பாலில் இருந்து கருங்கலில் உள்ள தனது பேத்தியை பார்ப்பதற்காக நாகர்கோவில் செல்லுகின்ற அரசு பேருந்தில் ஏறி சென்றுள்ளார். ஆனால் தனது மூதாட்டி தனது பேத்தி வீட்டிற்கு செல்லவில்லை. இது குறித்து ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் சவரிமுத்து புகார் தெரிவித்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story