ராமநாதபுரம் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பேரணி நடைபெற்றது
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் தமிழ் ஆட்சிமொழி சட்டம் வார விழாவையொட்டி விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் அவர்கள் விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்து பங்கேற்றார்கள். இப்பேரணியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவு, மாணவிகள் கலந்து கொண்டு தமிழ் ஆட்சி மொழி சட்டம் இயற்றப்பட்ட நினைவு கூறும் வகையில் ஒரு வார காலத்திற்கு வார விழா கொண்டாடும் வகையில் வரலாற்று சிறப்புகள் குறித்த விளம்பர பதாகைகள் ஏந்தி பொதுமக்கள் பார்த்து தெரிந்து கொள்ளும் வகையில் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று பேரணி பேருந்து நிலையம் வந்தடைந்தது. இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் சபீர்பானு அவர்கள், அரசு அலுவலர்கள், சவகர் சிறுவர் மன்ற மாணவர்கள், நாட்டுப்புற கலைஞர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story



