புஞ்சை புளியம்பட்டியில் லாட்டரி சீட்டு விற்ற வாலிபர் கைது
Bhavanisagar King 24x7 |26 Dec 2024 11:02 AM GMT
புஞ்சை புளியம்பட்டியில் லாட்டரி சீட்டு விற்ற வாலிபர் கைது
புஞ்சை புளியம்பட்டியில் லாட்டரி சீட்டு விற்ற வாலிபர் கைது ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புஞ்சைபுளியம்பட்டி காந்திபுரம் பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை நடப்பதாக புஞ்சைபுளியம்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் ஒருவர் கேரள மாநில லாட்டரி சீட்டு எண்களை ஒரு நோட் டில் எழுதி வைத்து விற்றுக்கொண்டிருந்தார்இதனால் அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் காந்திபுரம் பகுதியை சேர்ந்த ரியாஸ் (வயது 25) என்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்
Next Story