மாநில அளவிலான உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டியில் மீனாட்சி உடற்கல்வியியல் கல்லூரி மாணவர்கள் முதலிடம்
Ariyalur King 24x7 |26 Dec 2024 12:10 PM GMT
மாநில அளவிலான உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டியில் மீனாட்சி உடற்கல்வியியல் கல்லூரி மாணவர்கள் முதலிடம் பிடித்தனர்.
அரியலூர், டிச.26- மாநில அளவிலான உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டியில் மீனாட்சி உடற்கல்வியியல் கல்லூரி மாணவர்கள் முதலிடம் பெற்று சாதனை புரிந்தனர் தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான ஆண்கள் மற்றும் பெண்கள் நெட்பால் போட்டிகள் பெண்களுக்கான ஹாக்கி உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் அரியலூர் மாவட்டம் தத்தனூர் மீனாட்சி உடற்கல்வியியல் கல்லூரியில் நடைபெற்றது. இப்போட்டியில் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்டு வரும் உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு உட்பட்ட 10க்கும் மேற்பட்ட கல்லூரிகள் கலந்து கொண்டனர் இதில் ஆண்கள் நெட்பால் போட்டியில் திருச்சி ஜென்னிஸ் கல்லூரி முதலிடத்தையும் , தத்தனூர் மீனாட்சி உடற்கல்வியியல் கல்லூரி இரண்டாமிடத்தையும், சென்னை YMCA கல்லூரி மூன்றாமிடத்தையும், நாமக்கல் செல்வம் கல்லூரி நான்காம் இடத்தையும் பெற்று வெற்றி பெற்றனர். பெண்கள் நெட்பால் போட்டியில் தத்தனூர் மீனாட்சி உடற்கல்வியியல் கல்வியியல் கல்லூரி முதலிடத்தையும், சென்னை தமிழ்நாடு விளையாட்டு பல்கலைக்கழகம் இரண்டாமிடத்தையும், சென்னை YMCA கல்லூரி மூன்றாமிடத்தையும், நாமக்கல் செல்வம் கல்லூரி நான்காம் இடத்தையும் பெற்று வெற்றி பெற்றனர். பெண்களுக்கான ஹாக்கி போட்டியில் சென்னை தமிழ்நாடு விளையாட்டு பல்கலைக்கழகம் முதலிடத்தையும், சென்னை YMCA கல்லூரி இரண்டாமிடத்தையும், சேலம் சாரதா கல்லூரி மூன்றாமிடத்தையும், புதுக்கோட்டை மதர் தெரசா கல்லூரி நான்காமிடத்தையும் பெற்று வெற்றி பெற்றனர்.இறுதியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கல்லூரி தாளாளர் இரகுநாதன் பரிசுகளை வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார். நிகழ்ச்சியில் பல்வேறு விளையாட்டு பல்கலைக்கழக கல்லூரிகளைச் சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் பலரும் கலந்து கொண்டனர்
Next Story