குறும்பனை : கடலில் மூழ்கி மீன் தொழிலாளி சாவு
Nagercoil King 24x7 |26 Dec 2024 12:15 PM GMT
குளச்சல்
குமரி மாவட்டம் குறும்பனை அருகே சூசையப்பர் தெருவை சேர்ந்தவர் ததேயுஸ் (51). இவர் மீன்பிடி தொழிலாளி. நேற்று (25-ம் தேதி) காலை 10 மணி அளவில் வீட்டு முன்பு உள்ள கடலில் குளிக்க சென்றுள்ளார். கடலில் இறங்கியவர் சிறுது தூரம் நீந்தி சென்றதும், சில நிமிடத்தில் அவருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதில் அவர் கடலில் மிதந்தர். இதை கரையில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த உறவினர்கள் உடனே கடலில் குதித்து அவரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் குமரி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்ந்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ததேயுஸ் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து அவரது மனைவி ராஜகன்னி என்பவர் குளச்சல் மரைன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ததேயுஸ் உடல் பிரேத பரிசோதனை இன்று (26-ம் தேதி) மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் நடைபெற்றது.
Next Story