பேரூர்: மருதமலை கோவிலில் நாள் முழுவதும் அன்னதானம் தொடக்கம் !
Coimbatore King 24x7 |26 Dec 2024 12:39 PM GMT
கோவையில் உள்ள அருள்மிகு சுப்ரமணிய சாமி திருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
கோவையில் உள்ள அருள்மிகு சுப்ரமணிய சாமி திருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலம் துறை அமைச்சர் சேகர் பாபு, அரசு தலைமை செயலர் முருகானந்தம் முன்னிலையில் துவக்கி வைத்தார்.திருக்கோயில்களுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு உணவு அளிக்கும் அன்னதான திட்டத்தை தி.மு.க ஆட்சி அமைந்த பின்னர் விரிவுபடுத்திடும் வகையில் கோவை மாவட்டத்தில் ஆனைமலை போன்ற தமிழகத்தில் அமைந்து உள்ள கோயில்களில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.இந்த திட்டத்தை துவக்கி வைத்ததற்காக கோவை மாவட்ட ஆட்சியர் கிரந்தி குமார் நன்றி தெரிவித்தார். இதற்கு முன்னர் மருதமலை திருக்கோயிலில் நடைபெற்று வந்த அன்னதான திட்டம் மூலம் நாள் ஒன்றுக்கு 100 பக்தர்கள் பயனடைந்து வந்த நிலையில் இப்போது விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ள இந்த திட்டம் மூலம் நாள் ஒன்றுக்கு லட்சக் கணக்கான பக்தர்கள் பயனடைவார்கள். இந்த திட்டத்தை செயல்படுத்திய தமிழக அரசுக்கு நன்றிகள் தெரிவித்தார்.
Next Story