கோவை: விபத்தில் உயிரிழந்தவரின் உடல் உறுப்புகள் தானம் !

கோவை: விபத்தில் உயிரிழந்தவரின் உடல் உறுப்புகள் தானம் !
சாலை விபத்தில் மூளைச் சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் இன்று தானம் செய்யப்பட்டது.
கோவை,சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செட்டிபாளையத்தைச் சேர்ந்த 38 வயதான தங்கராஜ், சாலை விபத்தில் படுகாயம் அடைந்து மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து, அவரது குடும்பத்தினர் மனிதநேயத்துடன் அவரது கண்கள், சிறுநீரகம், கல்லீரல் என ஐந்து உறுப்புகளை தானமாக வழங்க முன்வந்தனர். கோவை மாநகர காவல்துறையினர் உடனடியாக செயல்பட்டு, உடல் உறுப்புகளை விரைவாகவும், பாதுகாப்பாகவும் கோவையில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்ல இன்று கிரீன் காரிடர் அமைத்தனர். தங்கராஜின் உடல் விரைவாக மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டது. தங்கராஜின் இந்த உன்னதமான செயல், உறுப்பு தானத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் அமைந்துள்ளது. அவரது குடும்பத்தினருக்கும், உறுப்பு தானத்திற்கு உதவிய அனைவரும் நன்றி தெரிவித்துள்ளனர்.
Next Story