எழுதப் படிக்கத் தெரியாத பெண்களை குறி வைத்து தாக்கும் மைக்ரோ பைனான்ஸ் லோன்.
Namakkal (Off) King 24x7 |26 Dec 2024 1:11 PM GMT
நாமக்கல்லில் மைக்ரோ பைனான்ஸ் என்ற பெயரில் பல்வேறு கந்துவட்டி கும்பல்கள் கிராமப்புற பகுதிகளில் குறிப்பாக பட்டியல் இன மக்கள் மீது குழு லோன் என்ற பெயரில் கடன் வாங்க வைத்தும் இரண்டு வருடத்தில் முடிய வேண்டிய கடனை நான்கைந்து ஆண்டுகளாக விரிவுபடுத்தும் கொடூர கும்பல்.
நாமக்கல் மாவட்டம் முழுவதும் பல தனியார் நிதி நிறுவனம் Micro Finance என்ற பெயரில் பல்வேறு கந்து வட்டி கும்பல்கள் கிராமப்புற பகுதிகளில் குறிப்பாக பட்டியலின மக்கள் sc சமூகத்தை சார்ந்த எழுதப் படிக்கத் தெரியாத பெண்களை குறி வைத்து குழு லோன் என்ற பெயரில் கடன் வாங்க வைத்தும் மேலும் வீட்டுக் கடன் என்று வீடு மற்றும் காலி நிலத்தின் பத்திரத்தைப் பெற்றுக் கொண்டு சிறிய தொகையை கடனாக வழங்கி இரண்டு வருடத்தில் முடிய வேண்டிய கடனை நான்கு, ஐந்து ஆண்டுகளாக விரிவுபடுத்தி அந்த வட்டி பணத்தில் பிழைப்பு நடத்திவரும் தனியார் நிதி நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுத்து அந்நிறுவனத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்து தர வேண்டியும், RBI சட்டங்களை கொஞ்சம் கூட கடைப்பிடிக்காத நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்து தரக் கோரி நாமக்கல் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் தமிழ்ப்புலிகள் கட்சியின் சார்பில் மனு அளிக்கப்பட்டது, வழக்கறிஞர் சசிகுமார் உடன் இருந்தார்
Next Story