சிறந்த சமூக சீர்திருத்தவாதி நல்லகண்ணு - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை புகழாரம்
Chennai King 24x7 |26 Dec 2024 1:20 PM GMT
சிறந்த சமூக சீர்திருத்தவாதியான நல்லககண்ணு, நல்ல உடல்நலத்துடன், நீண்ட ஆயுளுடன், தமது மக்கள் பணிகள் தொடர வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறேன் என்று தமிழக பாஜக தலைவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்லகண்ணுவின் 100-வது பிறந்த நாள் மற்றும் கட்சி அமைப்பு நூற்றாண்டு தொடக்க விழா இன்று (டிச.26) கொண்டாடப்படுகிறது. இதனை ஒட்டி பாஜக மாநில தலைவர், இன்றைய தினம், நூற்றாண்டு பிறந்த நாள் கொண்டாடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், நல்லகண்ணுவுக்கு, இனிய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். சிறந்த சமூக சீர்திருத்தவாதியான நல்லகண்ணு, நல்ல உடல்நலத்துடன், நீண்ட ஆயுளுடன், தமது மக்கள் பணிகள் தொடர வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறேன் என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
Next Story