பாலிடெக்னிக் ஆண்டு விழா.

பாலிடெக்னிக் ஆண்டு விழா.
மதுரை அழகர் கோவில் அருகே பாலிடெக்னிக் கல்லூரி ஆண்டு விழா நடைபெற்றது.
மதுரை அழகர் கோவில் லதா மாதவன் பாலிடெக்னிக் கல்லூரி 28 ஆம் ஆண்டு விழா இன்று (டிச.26)சேர்மன் டத்தோ டாக்டர் மாதவன் அவர்கள் தலைமையில் செயல் அலுவலர் பிரபாகரன் வரவேற்புரை நிகழ்த்த கல்லூரியின் ஆண்டறிக்கையை முதல்வர் தவமணி சமர்ப்பித்து விழா இனிதே நடைபெற்றது இவ் விழாவில் முதன்மை விருந்தினராக டிவிஎஸ் சென்சிங் சொல்யூஷன் துணைத் தலைவர் மாணிக்கவாசகம் அவர்கள் கலந்துகொண்டு இன்றைய தொழில்நுட்பத்தில் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் அதிக அளவில் பங்கு கொண்டுள்ளது இந்த தொழில்நுட்பத்தை மாணவர்கள் சிறப்பாக பயன்படுத்தி தொழில் வளர்ச்சியை மேம்படுத்தவும் இன்றளவும் சைபர் செக்யூரிட்டி என்பது மிக சவாலான செயலாக உள்ளது இந்த தொழில் வளர்ச்சியில் சைபர் குற்றங்களை தடுப்பதற்கான நுட்பங்களையும் கற்றுக்கொள்ள வேண்டும் வேலை தேடுபவர்களாக இல்லாமல் கொடுக்கும் மாணவராக உருவாக வேண்டும் என்று எடுத்துரைத்தார். மேலும் சிறப்பு விருந்தினராக மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் சிவகுமார் அவர்கள் கலந்து கொண்டு மாணவர்கள் எதிர்காலங்களில் ஒழுக்கத்தை மேம்படுத்தி அரசு பணிகளில் சிறந்த ஆளுமைகளாக நாட்டின் வளர்ச்சிக்கு துணை நிற்க வேண்டும். அதற்கு தேவையான தன்னம்பிக்கையும் பயிற்சியும் அவசியம் அதைத் தொடர்ந்து பயிற்சியும் செய்யும் பட்சத்தில் நீங்கள் நினைத்ததை அடைவீர்கள் என்று சிறப்பாக எடுத்துரைத்தார்கள் , அரசுத் தேர்வில் முதன்மை மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு சேர்மன் டாக்டர் டத்தோ மாதவன் அவர்கள் பரிசுகள் வழங்கி பாராட்டினார்கள். விழாவில் செயல் அலுவலர்கள் முத்துமணி, காந்திநாதன், மீனாட்சி சுந்தரம், கல்லூரி முதல்வர்கள் சரவணன் ,முருகன் பள்ளி முதல்வர் புவனேஸ்வரி, துணை முதல்வர்கள் டீன், பேராசிரியர்கள் அலுவலக மேலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழாவினை அலுவலக மேலாளர் சிவசுப்பிரமணியன், கணினி துறை பேராசிரியர் அழகுராஜா ஆகியோர் ஒருங்கிணைத்தனர் நிறைவாக துணை முதல்வர் ஜெயபிரசாத் நன்றி கூறி நிறைவு செய்தார்.
Next Story