ஓய்வூதியம் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு.
Namakkal (Off) King 24x7 |26 Dec 2024 1:32 PM GMT
நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 13,690 ஓய்வூதியதாரர்கள் உள்ளனர். மாவட்ட ஆட்சியர் ச.உமா தகவல்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 13,690 ஓய்வூதியதாரர்கள் உள்ளனர். 3.12.2024 முதல் 12.12.2024 வரை 60 மனுக்கள் பெறப்பட்டு, அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இன்றைய தினம் நடைபெற்ற ஓய்வூதியர்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் ஓய்வூதியர்கள் மற்றும் சங்க உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் ஓய்வூதியர்கள் சங்க உறுப்பினர்கள் 14 நபர்கள், 54 ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர்.இக்கூட்டத்தில் குடும்ப ஓய்வூதியம், குடும்ப பாதுகாப்பு நிதி, விடுப்பில் சென்ற நாட்களை முறைப்படுத்துதல், பணி காலத்தில் இறந்த ஊழியரின் குடும்பத்திற்கு குடும்ப ஓய்வூதியம் மற்றும் இதர பணப்பயன்கள், சிறப்பு ஓய்வூதியம், வீட்டு வாடகை படி வழங்கியதில் உள்ள வித்தியாச தொகை, மருத்துவ செலவுத்தொகை, தர ஊதியம் உயர்த்தி வழங்கப்பட்ட ஆணை நகல், விடுப்பில் சென்ற காலத்திற்கு விடுப்பு கால ஊதியம், திருத்தியமைக்கப்பட்ட ஓய்வூதிய பலன்கள், பணிக்கொடை, குறைந்த பட்ச குடும்ப ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு மனுக்களை ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் வழங்கினார்கள். ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களின் மனுவினை பரிசீலித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது துரித நடவடிக்கை மேற்கொண்டு விரைந்து தீர்வு வழங்க வேண்டும். மேலும், ஓய்வூதியர்கள் அனைவரும் நம்மை போன்று பல்வேறு அரசுத்துறைகளில் நமக்கு முன்னர் பணி செய்தவர்கள் தான் என்பதை கருத்தில் கொண்டு முழு ஈடுபாட்டுடன் இந்த மனுக்களுக்கு விரைந்து தீர்வு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மருத்துவர் ரெ.சுமன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வ.சந்தியா துறை சார்ந்த அலுவலர்கள், ஓய்வூதியர்கள் சங்க உறுப்பினர்கள், ஓய்வூதியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story