ரயிலில் வழிப்பறி செய்தவர் கைது
Tiruvallur King 24x7 |26 Dec 2024 2:55 PM GMT
ரயிலில் வழிப்பறி செய்தவர் கைது
ஆவடி அடுத்த பட்டாபிராம், காமராஜபுரத்தைச் சேர்ந்தவர் சபர்மதி, 47. செவிலியர். இவர், கடந்த 7ம் தேதி இரவு, பணி முடிந்து மின்சார ரயிலில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். இந்து கல்லுாரி ரயில் நிலையத்தில், ரயில் நின்று சென்ற போது, ரயிலில் இருந்த மர்ம நபர் ஒருவர், சபர்மதி அணிந்திருந்த ஐந்தரை சவரன் தாலி செயினை பறித்து தப்பினார். இது குறித்து விசாரித்த ஆவடி ரயில்வே போலீசார், வழிப்பறியில் ஈடுபட்ட பழைய வண்ணாரப்பேட்டை, ராமதாஸ் நகரைச் சேர்ந்த சுந்தரேசன், 23, என்பவரை நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்து, 4 சவரன் நகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Next Story