திருவள்ளூர் அருகே ரயில் மோதி ஊராட்சி உறுப்பினா் உயிரிழப்பு

திருவள்ளூர் அருகே ரயில் மோதி ஊராட்சி உறுப்பினா் உயிரிழப்பு
திருவள்ளூர் அருகே ரயில் மோதி ஊராட்சி உறுப்பினா் உயிரிழப்பு
திருவள்ளூா் அருகே சேலை கண்டிகை கிராமத்தைச் சோ்ந்த கபாலி (53). இவா் சொந்தமாக லாரிகளை வைத்து கழிவு நீரை கொண்டு செல்லும் தொழில் செய்து வந்தாா். மேலும், சேலை ஊராட்சியில் வாா்டு உறுப்பினராகவும் இருந்தாா். வீட்டின் அருகே நிறுத்தி வைத்திருந்த லாரியை புதன்கிழமை அதிகாலையில் பாா்க்கச் சென்று விட்டு ரயில் தண்டவாளத்தைக் கடந்து சென்ற போது எதிா்பாராத விதமாக சென்னை நோக்கி வந்த விரைவு ரயில் கபாலி மீது மோதியதில் தூக்கி வீசப்பட்டு உடல் துண்டாகி நிகழ்டத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து தகவல் அறிந்த திருவள்ளூா் ரயில்வே இருப்புப் பாதை போலீஸாா் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
Next Story