இந்திய மாணவர் சங்கம் கோரிக்கை

இந்திய மாணவர் சங்கம் கோரிக்கை
திண்டுக்கல் மாவட்டத்தில் அரையாண்டு தேர்வு விடுமுறை காலத்தில் பள்ளிகளில் நடைபெறும் சிறப்பு வகுப்புகளை நிறுத்த மாவட்ட கல்வி துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! - இந்திய மாணவர் சங்கம் கோரிக்கை
திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும், தனியார் பள்ளிகளுக்கு தற்போது அரையாண்டு தேர்வுகள் நடைபெற்று முடிந்து விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பல்வேறு பள்ளிகளில் 10, 11, 12 வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவது மாணவர் நலனில் அக்கறை இல்லாத செயல் ஆகும். பள்ளி மாணவர்கள் தேர்வு எழுதி முடித்தவுடன் அறிவிக்கப்படும் விடுமுறைகள் மாணவர்களுக்கு மனரீதியாக தேவைப்படும் ஒன்றாகும். இந்த விடுமுறைகளை மறுத்து வகுப்புகள் நடத்துவது மாணவர்களை மனரீதியாக பாதிக்கும் நடைமுறை. விடுமுறை காலங்களில் பள்ளி மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தி மாணவர்களை மனரீதியாக பாதிப்பதையும், பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தலை மீறியும் செயல்படும் பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், சிறப்பு வகுப்புகள் நடத்தும் அனைத்து வகை பள்ளிகளில் சிறப்பு வகுப்புகளை நிறுத்திடவும் மாவட்ட கல்வித்துறையும், மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கம் திண்டுக்கல் மாவட்டக் குழு வலியுறுத்துகிறது.
Next Story