மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பட்டதாரி ஆசிரியர் பலி

மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பட்டதாரி ஆசிரியர் பலி
X
விபத்தை ஏற்படுத்தியவர் கவலைக்கிடம்
விருத்தாசலம் அடுத்த கம்மாபுரம் அருகே உள்ள பெருந்துறை கிராமத்தைச் சேர்ந்தவர் தனபால் (வயது 58). விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவர் தன்னுடைய மோட்டார் சைக்கிளில் சூ. கீணனூர் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் தூக்கி வீசப்பட்டு படுகாயத்துடன் ரத்த வெள்ளத்தில் துடி துடித்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். உடன் தகவல் கிடைத்து விரைந்து சென்ற கம்மாபுரம் போலீசார் பிரேதத்தை கைப்பற்றி விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விபத்தை ஏற்படுத்திய கம்மாபுரத்தைச் சேர்ந்த சேகர் மகன் தமிழ்வாணன் (21), என்பவர் கீழே விழுந்து காயம் அடைந்ததால், விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது குறித்து புகாரின் பேரில் கம்மாபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி மோதிக்கொண்ட விபத்தில், அரசு பள்ளி ஆசிரியர் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story