நலத்திட்ட பணிகளை துவங்கி வைத்த எம்எல்ஏ
Dharmapuri King 24x7 |27 Dec 2024 1:31 AM GMT
பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிக்குட்பட்ட கடத்தூர் வட்டாரத்தில் நலத்திட்ட பணிகளுக்கு பூமி பூஜை செய்தும், புதிய கட்டிடத்தை திறந்து வைத்த பாப்பிரெட்டிபட்டி எம் எல் ஏ கோவிந்தசாமி
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, கடத்தூர் ஊராட்சி ஒன்றியம், தொங்கனூர் மற்றும் கோபிசெட்டிபாளையம் ஆகிய பகுதியில், ரூபாய் 29 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக சுற்றுச்சுவர் மற்றும் 30,000-லிட்டர்,OHT டேங்க் அமைக்கும் பணியை, பாப்பிரெட்டிப்பட்டி சட்ட மன்ற உறுப்பினர் கோவிந்தசாமி.M.L.A. நேற்று பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து பாப்பிரெட்டிப்பட்டி, ஊராட்சி ஒன்றியம், பொ.துறிஞ்சிப்பட்டி பகுதியில் உள்ள கூட்டுறவு நியாய விலைக்கடைக்கு, ரூபாய் 12.40 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள பல்நோக்கு மைய கட்டிடத்தை, பாப்பிரெட்டிப்பட்டி சட்ட மன்ற உறுப்பினர் திறந்து வைத்தார். உடன், ஒன்றிய கழக செயலாளர்கள், சேகர், மதிவாணன், ஆகியோர் கலந்து கொண்டனர்.
Next Story