கீழப்பாவூர் நீர் தேக்க தொட்டிக்கு அடிக்கல் நாட்டு விழா

கீழப்பாவூர்  நீர் தேக்க தொட்டிக்கு அடிக்கல் நாட்டு விழா
நீர் தேக்க தொட்டிக்கு அடிக்கல் நாட்டு விழா
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கீழப்பாவூர் பேரூராட்சி பொது நிதியிலிருந்து ரூ.7.6 லட்சம் மதிப்பீட்டில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி கட்ட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக கழக செயலாளர் வே.ஜெயபாலன் தலைமையில் அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற தலைவர் P.M.S.ராஜன், 18 வது வார்டு உறுப்பினர் பொன்செல்வன் மற்றும் அரசு ஊழியர்களும் பொதுமக்களும் நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானூர் கலந்து கொண்டனர்.
Next Story