அரசு மருத்துவமனையில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருட்டு
Dharmapuri King 24x7 |27 Dec 2024 2:16 AM GMT
தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த இரண்டு தினங்களில் 10 இருசக்கர வாகனங்கள் திருட்டு பொதுமக்கள் அவதி
தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்வேறு சிகிச்சைகளுக்காக தினமும் 3 ஆயிரம் வெளிநோயாளிகள் வந்து செல்கின்றனர். உள் நோயாளியாக 1000க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெறுகின்றனர். இவர்களை பார்ப்பதற்காக வரும் உறவினர்கள், தங்களது இருசக்கர வாகனங்கள் மருத்துவமனை வளாகத்தில் உள்ள இருசக்கர வாகனங்கள் நிறுத்தமிடத்திலும் அருகாமையில் உள்ள புறக்காவல் நிலையம் அருகேயும், பிரசவ வார்டு அருகேயும் நிறுத்தி விட்டு செல்கின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தப்படும் இருசக்கர வானங்கள் திருடு போகிறது.நேற்று, மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வரும், குமாரபாளையத்தை மோனிஸ்குமார் வங்கி அருகே தனது புல்லட்டை நிறுத்தி விட்டு பணிக்கு சென்றார். அரைமணி நேரத்தில் திரும்பி வந்தபோது, புல்லட்டை காணாமல் அதிர்ச்சிய டைந்தார். இதுகுறித்து அவர் தர்மபுரி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வரும் யோகாநந்தன் , சிவாடியை சேர்ந்த தொழிலாளி சக்கரவர்த்தியின் இருசக்கர வாகனங்கள் கடந்த 2 நாட்களில் 10 இருசக்கர வாகனங்கள் திருடப்பட்டுள்ளது . மருத்துவமனை வளாகத்தில் புறக்காவல் நிலையம் இருந்தும், இருசக்கர வாகனங்கள் திருடு போவதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து உள்ளனர். எனவே, காவலர்கள் துரிதமாக விசாரணை நடத்தி, காணாமல் போன வாகனங்களை கண்டுபிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story