எதிர்கட்சிகள் இல்லையென்ற நிலையை உருவாக்குவோம் : அமைச்சர்

எதிர்கட்சிகள் இல்லையென்ற நிலையை உருவாக்குவோம் : அமைச்சர்
2026 தேர்தலில் தமிழகத்தில் எதிர்கட்சிகள் இல்லையென்ற நிலையை உருவாக்குவோம் என திமுக கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.
தூத்துக்குடி அண்ணாநகர் பகுதி திமுக செயற்குழு கூட்டம் தனியார் மஹாலில் நடைபெற்ற கூட்டத்திற்கு பகுதி செயலாளர் ரவீந்திரன் தலைமை வகித்தாா். வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில்: திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான தளபதியார் வரும் 29, 30, ஆகிய தேதிகளில் தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தந்து புதிய திட்டங்களை துவக்கி வைக்கவுள்ளார். 29ம் தேதி மாலை டைட்டல் பார்க் திறப்பு கட்சி நிர்வாகிகளுடன் கள ஆய்வு நடைபெறுகிறது. 30ம் தேதி காலை புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கல்வி உதவித்தொகை விரிவாக்க திட்டத்தை துவக்கி வைக்கிறார். டைட்டல்பார்க் திறப்பின் மூலம் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவது போல் அரசு உதவிப்பெறும் பள்ளிகளிலும் படிக்கும் மாணவ மாணவிகளுக்கும் வழங்கும் திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் பெற்றோர்களுக்கு சுமை குறைந்துள்ளது. மாணவிகள் படிப்பின் மூலம் அடுத்தக்கட்ட வாழ்க்கைக்கு தொடர்வதன் மூலம் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். தமிழக முதலமைச்சர் ஓவ்வொரு திட்டங்களையும் பார்த்து பார்த்து மூன்றரை ஆண்டுகாலம் திமுக ஆட்சியில் எல்லோருக்கும் எல்லாம் என்ற திராவிட மாடல் ஆட்சியை செய்து வருகிறார். தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் 400 கோடிக்கு மேல் பல்வேறு வளர்ச்சி பணிகள் செய்யப்பட்டுள்ளன. அதன் மூலம் கடந்த காலங்களில் ஏற்பட்டதை போன்ற மழை பாதிப்புகள் இந்த ஆண்டு ஏற்படவில்லை. அதிமுக ஆட்சியில் எந்த திட்டங்களும் முறையாக செயல்படுத்தவில்லை. அந்த பாதிப்பை எல்லாம் உணர்ந்த திமுக அரசு மக்களுக்கான பணிகளை முழுமையாக செய்து வருகிறது. தொடர்ந்து சாலை கால்வாய் என அனைத்து பணிகளும் நடைபெறும் 16, 17, 18 ஆகிய வார்டு பகுதிகளில் தேங்கிய மழை நீரையும் பல்வேறு வழித்தடங்கள் மூலம் மின்மோட்டார்கள் மூலமும் அகற்றப்பட்டன. பெண்களுக்கு மகளிர் உரிமைத்தொகை, கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதுமட்டுமின்றி மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 30 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. அதன் மூலம் பல்வேறு தொழில்களை செய்து பெண்கள் தன்னம்பிக்கையுடன் வாழ்கிறார்கள். தற்போது எல்லாத்துறையிலும் வளர்ச்சியடைந்த மாநிலமாக திகழ்கிறது. 2030ல் தமிழ்நாடு மிகப்பெரிய வளர்ச்சியடைந்த நாடுகளின் பட்டியல்களில் இடம் பெறும். 2026ல் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் வெல்ல வேண்டும் என்று முதல்வர் இலக்கு நிர்ணயித்துள்ளார். நாம் தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திலுள்ள 3 தொகுதிகள் உள்பட 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். எதிர்கட்சிகளே 2026ல் இல்லை என்ற நிலையை உருவாக்குவோம், அதற்கு அனைவரும் சபதம் ஏற்று களப்பணியாற்றுங்கள் என்று பேசினார்.
Next Story