ஆற்காடு அருகே நகை திருட்டு-போலீஸ் விசாரணை!
Ranipet King 24x7 |27 Dec 2024 3:46 AM GMT
வீட்டின் பூட்டை உடைத்து 17 பவுன் நகை திருட்டு
ஆற்காட்டை அடுத்த கிருஷ்ணாவரம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 34), இவர் சிலருக்கு வட்டிக்கு பணம் கொடுத்து பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். அதே பகுதியில் வசித்த இவரது உறவினர் இறந்ததையொட்டி மணிகண்டன் நேற்று முன்தினம் இரவு வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் சென்றார். நேற்று காலை வந்து பார்த்தபோது முன் பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு மணிகண்டன் அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த 2 பீரோக்கள் உடைக்கப்பட்டு அதிலிருந்த செயின், மோதிரம், வளையல், கம்மல் உள்ளிட்ட 17 பவுன் நகைகள் திருட்டு போயிருப்பது தெரிய வந்தது. இது குறித்து மணிகண்டன் ஆற்காடு தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வந்து அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story