கோவில்களில் மண்டலாபிஷேக பூர்த்தி
Kallakurichi King 24x7 |27 Dec 2024 3:54 AM GMT
பூர்த்தி
கள்ளக்குறிச்சி பகுதி கோவில்களில் ஐயப்பன் சுவாமிக்கு மண்டலாபிஷேக பூர்த்தி விழா நடந்தது. கள்ளக்குறிச்சி மந்தைவெளி முத்துமாரியம்மன் கோவிலில் உள்ள ஐயப்ப சுவாமிக்கு நேற்று மண்டலாபிஷேக பூர்த்தி விழா நடந்தது.இதையொட்டி அதிகாலை மகாகணபதி ஹோமம், தீபாராதனை, தொடர்ந்து கோமுகி ஆற்றிலிருந்து சுவாமி சக்தி அழைத்தல், சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. நெல், தயிர், இளநீர், சந்தனம், எலுமிச்சம்பழம் ஆகிய மங்கல பொருட்களால் அபிஷேகமும், சிறப்பு அலங்காரத்துடன் புஷ்பாஞ்சலி பூஜை செய்து மகாதீபாராதனை நடந்தது. அய்யப்பபக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல் சிவகாமசுந்தரி சமேத சிதம்பரேஸ்வரர், கமலா நேரு தெரு காமாட்சி அம்மன் கோவில், துருகம் ரோடு பழைய மாரியம்மன் கோவில்களில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா நடந்தது.
Next Story