மது விற்பனை
Erode King 24x7 |27 Dec 2024 4:57 AM GMT
ஈரோடு மாவட்டத்தில் இந்த ஆண்டில் இதுவரை சட்ட விரோதமாக மது விற்ற 1,307 பேர் கைது 16, 335 மது பாட்டில்கள் பறிமுதல்
ஈரோடு கோபிசெட்டிபாளையத்தில் மதுவிலக்கு போலீஸ் நிலையம் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆண்டில் கடந்த நவம்பர் மாதம் வரை பல்வேறு இடங்களில் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதே போல் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. இது குறித்து மதுவிலக்கு டி.எஸ்.பி சண்முகம் கூறியதாவது:-ஈரோடு மாவட்டம் முழுவதும் கடந்த ஜனவரி முதல் நவம்பர் மாதம் வரை சட்ட விரோதம் மது விற்பனையில் ஈடுபட்டதாக மொத்தம் 1, 318 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக 1,037 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதைப்போல் கர்நாடகா மாநில மது உற்றதாக 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் 16,335 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. விஷ சாராயம் வைத்திருந்ததாக ஒன்பது வழக்குகளில் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 43 லிட்டர் சாராயம் கைப்பற்றப்பட்டுள்ளது. சாராய ஊறல் 295 லிட்டர் அழிக்கப்பட்டுள்ளது.மதுபான பாட்டில்கள் கடத்தியதாக 30 இரு சக்கர வாகனங்கள், நான்கு நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மது போதைப்பொருள் விற்றது தொடர்பாக 9 பேர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். வெள்ளோடு போலீஸ் நிலையத்தில் சில மாதங்களுக்கு முன் போதை பொருட்கள் வழக்கில் சிக்கிய மூவர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
Next Story