கோபிச்செட்டிப்பாளையம் கழிவறையில் தவறி விழுந்து தொழிலாளி பலி

X
கோபி: கழிவறையில் தவறி விழுந்து தொழிலாளி பலி ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள வடக்குப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (64). இவர் கோபி நல்லகவுண்டம் பாளையத்தில் உள்ள முறுக்கு கம்பெனியில் வேலை செய்து வந்தார். வாரம் ஒருமுறை சத்தியில் உள்ளவீட்டிற்கு சென்று வருவார். இந்தநிலையில், கிருஷ்ணன் 24ம் தேதி இரவு வேலை முடிந்து கரட்டடிபாளையத்தில் உள்ள கழிவறையில் இயற்கை உபாதைகளை கழிக்க சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் அக்கம், பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அங்கு எதிர்பாராத விதமாக கழிவறையில் தலைகீழாக தவறி விழுந்து கிடந்தார். உடனடியாக, அவரை மீட்டு கோபி அரசு ஆஸ்பத்திரி எடுத்துச் சென்றனர். ஆனால். செல்லும் வழியிலேயே கிருஷ்ணன் உயிரிழந்தார். கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
Next Story

