கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வீட்டுமனை வழங்க வலியுறுத்தி காத்திருக்கும் போராட்டம்.
Karur King 24x7 |27 Dec 2024 5:59 AM GMT
கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வீட்டுமனை வழங்க வலியுறுத்தி காத்திருக்கும் போராட்டம்.
கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வீட்டுமனை வழங்க வலியுறுத்தி காத்திருக்கும் போராட்டம். கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆதிதிராவிடர் நலன் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலம் இலவச வீட்டு மனை வழங்க கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் காலியாக உள்ளவற்றில் இலவச வீட்டுமனை கோரி விண்ணப்பித்தவர்களுக்கு இலவச வீட்டு மனை வாங்க வலியுறுத்தியும் தகுதி உள்ள அனைவருக்கும் இலவச வீட்டு மனை வழங்க ஏதுவாக போதுமான நிலம் கையகப்படுத்த வலியுறுத்தியும் காத்திருக்கும் போராட்டம் கட்டுமான தொழிற்சங்க மாவட்ட தலைவர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் சிஐடியு மாவட்ட செயலாளர் முருகேசன், மாவட்ட உதவி செயலாளர் ஹோச்சுமின், மாவட்ட உதவி செயலாளர் தண்டபாணி, மாவட்ட தலைவர் சுப்பிரமணியன், மாவட்ட குழு உறுப்பினர் ராஜேந்திரன், டாஸ்மாக் சங்க மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, ஆட்டோ சங்கத் தலைவர் ரங்கராஜ்,அரவக்குறிச்சி முறைசாரா ஒருங்கிணைப்பு குழு பொறுப்பாளர் கணேசன் உள்ளிட்ட CITU & CWFI நிர்வாகிகள் கலந்து கொண்டு காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, இலவச வீட்டு மனை வழங்க வகைப்படுத்தப்பட்ட நிலங்களில் வீட்டுமனை பெற்றவர்களை குடியமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். காலியாக உள்ள வீட்டு மனைகளில் இலவச வீட்டு மனைக்கு பரிந்துறைக்கப்பட்டவர்களுக்கு துரிதமாக வீட்டுமனை வழங்க வேண்டும். வீட்டு மனை பெற தகுதி உள்ள அனைவருக்கும் இலவச வீட்டு மனை வழங்க போதுமான நிலம் கையகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இலவச வீட்டு மனை பட்டா கேட்டு, நீண்ட காலம் நிலுவையில் உள்ள முன்னுரிமை பயனாளர்கள் என்கிற பட்டியலில் உள்ளவர்களுக்கு, ஆண்டு கணக்கில் வழங்கப்படாமல் காலம் தாழ்த்தும் நிலைமையை போக்கிட துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்ட இடங்களில் பட்டா பெற்ற அனைவரும் குடியேற ஏதுவாக அடிப்படை வசதிகளை உத்தரவாதப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை அவர்கள் முன் வைத்தனர்
Next Story